/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காசநோய் தடுப்பு விழிப்புணர்வு
/
காசநோய் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 17, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் காசநோய் தடுப்பு குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுடர்விழி தலைமை தாங்கினார். புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் துரைராஜ் முன்னிலை வகித்தார்.
ஆய்வக மேற்பார்வையாளர் மகேந்திரன் வரவேற்றார். இதில் காசநோய் மற்றும் அதை தடுக்கும் முறைகள் குறித்து விளக்கி கூறி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
நிகழ்ச்சியில் உதவி பயிற்சி அலுவலர் சந்தோஷம், பயிற்றுனர்கள் கிருஷ்ணமுர்த்தி, சுரேஷ், முர்த்தி, பவித்ரா மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.