ADDED : அக் 23, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு காசநோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
முகாமினை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். முகாமில் அதி நவீன நுண்கதிர் வாகனத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் ராஜா, மாவட்ட அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பாளர் இளவரசன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பரந்தாமன், சுகாதார ஆய்வாளர்கள் சார்லஸ், விஜயராகவன், ஆய்வக நுட்புணர் சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.