/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவர் கைது
/
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவர் கைது
ADDED : அக் 27, 2025 12:09 AM
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல், 34; ஜோசியர். கடந்த 23ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி சென்றார். கடந்த 25ம் தேதி வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து முருகவேல் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் பணம் திருடியது, திருநாவலுார் அடுத்த குச்சி பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கோகுல்ராஜ், 24; தங்கராசு மகன் சேவிரத்திரி, 27; என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

