/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கிய இருவர் கைது
/
சாராயம் காய்ச்ச வெல்லம் பதுக்கிய இருவர் கைது
ADDED : ஆக 20, 2025 10:57 PM

கச்சிராயபாளையம்;கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் வெல்லம் பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள தொரடிப்பட்டு, எருக்கப்பட்டு, தாழ்கெண்டிக்கல் ஆகிய கிராமங்களில் சாராய ரெய்டு நடத்தினர்.
அப்போது தாழ்கெண்டிக்கல் கிராமத்தை சேர்ந்த ஆண்டி மகன் பெருமாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் 700 கிலோ வெல்லம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 700 கிலோ வெல்லம் மற்றும் 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் பெருமாள், 50; கரியான் மகன் தயாளமூர்த்தி, 20; ஆகியோரை கைது செய்தனர்.