/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற இருவர் கைது
/
மது பாட்டில் விற்ற இருவர் கைது
ADDED : ஜன 19, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்: மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பள்ளிப்பட்டு கூட்ரோடு அருகே நின்றிருந்த இருவர் போலீசாரை கண்டதும் ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் கள்ளக்குறிச்சி குளத்து மேட்டு தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் சரவணன்,43; எம்.ஆர்.என்., நகரை சேர்ந்த நடேசன் மகன் பாலமுருகன்,45; என்பதும், இருவரும் முறைகேடாக மது பாட்டில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

