ADDED : அக் 26, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மது பாட்டில் விற்பனை செய்த முதியோர் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப்இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று கரடிசித்துார் மற்றும் துரூர் கிராமங்களில் ரோந்து சென்றனர். அப்போது கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி, 78; தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதே போல் துரூர் கிராமத்தில் சின்னப்பையன் மனைவி அம்மணியம்மாள், 71; என்பவர் தனது வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரிடமிருந்தும் 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தசாமி மற்றும் அம்மணியம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.

