ADDED : ஜூலை 10, 2025 09:50 PM
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விஜய், 23; அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் வீட்டிற்கு சென்ற விஜய், நண்பருக்கு பிறந்த நாள் விழா நடப்பதால் அதற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விஜய் அவரது நண்பர்களான ரஞ்சித், 20; ஆதிசங்கர், 23; விஷ்ணு, 22; மோகன், 20; முருகன், 21; ஆகியோர் வெங்கடேசனிடம் தகராறு செய்தனர்.
இதனை தட்டிக்கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் ரமேஷ், 28; மற்றும் சிலரையும் தாக்கி, மிரட்டல் விடுத்தனர். இதனால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் விஜய், ரஞ்சித் ஆதிசங்கர் உட்பட 6 பேர் மீது அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, ரஞ்சித், ஆதிசங்கர் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

