/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது
/
மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது
ADDED : ஜன 12, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; சின்னசேலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் நேற்று அம்மையகரம், தென்பொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா, 57; என்பவர் அவரது வீட்டின் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதேபோல் தென்பொன்பரப்பி, வடக்கு காட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி, 45; , என்பவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த சின்னசேலம் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.