ADDED : நவ 28, 2025 05:31 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அண்ணாதுரை சிலை எதிரில் நடந்த விழாவிற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், ஒன்றிய சேர்மன் தாமோதரன்.
பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவித்து தொண்டர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கினார்.
கட்சி நிர்வாகிகள் மூர்த்தி, அமுதா, அருட்செல்வன் அப்துல் சமது, பழனிசாமி, அக்பர்உசேன், ராஜசேகரன், பரசுராமன், கோபால், அழகேசன், மகாதேவி, பாலாஜி, பிரகாஷ், செந்தில், மணிகண்டன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரிஷிவந்தியம் வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, தி.மு.க., கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், மாவட்ட துணைச் செயலா ளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தி.மு.க., வின் துாரிகை குழுவினர் ஏற்பாட்டில் கேக்வெட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

