/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க.,வினர் 453 பேர் கைது
/
கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க.,வினர் 453 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க.,வினர் 453 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க.,வினர் 453 பேர் கைது
ADDED : டிச 31, 2024 06:30 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அனுமதி மீறி ஆர்ப்பாட்டம் செய்ய ஊர்வலமாக சென்ற அ.தி.மு.க., நிர்வாகிகள் 453 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் மற்றும் பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையொட்டி நேற்று காலை நடந்தது. இதையொட்டி, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமையில், நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகர அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில், முன்னாள் அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பிரபு, அழகுவேலு பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் நான்குமுனை சந்திப்பு பகுதிக்கு பேரணியாக நடந்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதிக்கு சென்ற அ.தி.மு.க., நிர்வாகிகளை போலீசார் மறித்து கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.
அனுமதியின்றி, பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக மாவட்ட செயலாளர் மற்றும் அதில், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, நகர செயலாளர் பாபு, பிற அணி மாவட்ட செயலாளர்கள் ஜெ., பேரவை ஞானவேல், வழக்கறிஞர் பிரிவு சீனுவாசன், எம்.ஜி.ஆர்., மன்றம் தங்க பாண்டியன், இளைஞர், இளம்பெண் பாசறை வினோத் 13 பெண்கள் உட்பட 453 பேரை போலீசார் கைது செய்து, மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
முன்னதாக கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் நடந்து சென்ற அ.தி.மு.க., வினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது, எஸ்.பி., ரஜத்சதுர்வேதி அ.தி.மு.க., நிர்வாகிகளை தடுத்து, இழுத்தார். அதில், சின்னசேலத்தை சேர்ந்த ஜெ., பேரவை மாவட்ட துணை செயலாளர் கோவிந்தனின் சட்டை கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.