/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
க.மாமனந்தலில் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்தேக்க தொட்டி
/
க.மாமனந்தலில் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்தேக்க தொட்டி
க.மாமனந்தலில் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்தேக்க தொட்டி
க.மாமனந்தலில் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை நீர்தேக்க தொட்டி
ADDED : அக் 07, 2025 11:59 PM

கள்ளக்குறிச்சி; க.மாமனந்தல் ஊராட்சியில் கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் சேவை மைய திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தை சேர்ந்த க.மாமனந்தல் ஊராட்சியில் 2024-25ம் ஆண்டிற்கான நபார்டு திட்டத்தில் ரூ.18.40 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து பல மாதங்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
அதேபோல் அதன் அருகே உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடமும் கட்டி முடித்து பல ஆண்டுகள் கடந்தும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
லேம்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.