/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆலத்துார் புதிய மருந்து கிடங்கு கட்டடம் திறப்பு
/
ஆலத்துார் புதிய மருந்து கிடங்கு கட்டடம் திறப்பு
ADDED : அக் 07, 2025 12:42 AM

கள்ளக்குறிச்சி; ஆலத்துார் புதிய மருந்து கிடங்கு உட்பட முடிவுற்ற பல்வேறு புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துாரில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் ரூ. 6 கோடி மதிப்பில் மாவட்ட மருந்து கிடங்கு கட்டப்பட்டது. புதிய மாவட்ட மருந்து கிடங்கினை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த், மலையரசன் எம்.பி., உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆகியோர் குத்துவிளக்கேற்றி, புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன்கள் கள்ளக்குறிச்சி அலமேலு ஆறுமுகம், சங்கராபுரம் திலகவதி நாகராஜன், கல்வராயன்மலை சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜீவ், ஆர்.டி.ஓ., முருகன், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய மருந்து கிடங்கின் மூலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 11 அரசு மருத்துவமனைகள், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 பிற அரசு மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள் என மொத்தம் 87 மருத்துவமனைகள் பயன்பெறும்.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் களத்துாரில் 98 லட்சம் மதிப்பிலான 4 வகுப்பறை பள்ளி கட்டடம், இன்னாடு கிராமத்தில் ரூ. 3.5 கோடி மதிப்பிலான சமூக நீதி விடுதி மற்றும் ரூ. 1.95 கோடி மதிப்பிலான 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடம், மணியார்பாளையத்தில் ரூ. 1.53 கோடி மதிப்பிலான 5 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் கொண்ட பள்ளி கட்டடமும் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.