ADDED : ஜூலை 14, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : பரமநத்தம் தீப்பாஞ்சாலி அம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நடந்தது.
சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தில் உள்ள தீப்பாஞ்சாலி அம்மன், மதுரைவீரன், மாயவன் கோவில்களில் ஊரணி பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
காலை 11:00 மணிக்கு சக்தி அழைத்தலும், அதனைத்தொடர்ந்து ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை பரமனத்தம் கிராம மக்கள் செய்தனர்.