
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நடந்த அம்மன் கோவில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலுார், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வாசவி ஜெயந்தியையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு கலச ஸ்தாபனம்; 9:00 மணிக்கு ஹோமம்; 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் ஊஞ்சல் சேவையிலும், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரவு அம்ச வாகனத்தில், வான வேடிக்கையுடன் வீதி சுவாமி உலா நடந்தது.

