/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு
/
ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு
ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு
ஊராட்சி தலைவர், செயலாளர் மீது துணைத் தலைவர் புகார் அளிப்பு
ADDED : அக் 30, 2025 10:37 PM

கள்ளக்குறிச்சி:  சேஷசமுத்திரம் கிராம ஊராட்சியில் ஊழல்கள் செய்து வரும் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சங்கராபுரம் வட்டம், நெடுமானுார் அஞ்சல் சேஷசமுத்திரம் கிராம ஊராட்சி துணை தலைவர் நாகஜோதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பிரியா, கவி, பிரீத்தா ஆகியோர் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சேஷசமுத்திரம் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்த  கிராம பஞ்சாயத்து கூட்டாமலும், ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை காட்டாமலும் திட்டங்களின் பெயர்களில் ஊழல் செய்து வருகின்றனர். மேலும் கிணறு வெட்டாமலேயே புதிதாக கிணறு வெட்டியது போலவும், மின் மோட்டார்களை வாங்கியது போலவும் கணக்கு காட்டிவிட்டு பணத்தை எடுத்து கொள்கின்றனர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்  போலி நபர்களின் பேரில் வேலை கொடுத்திருப்பதாக பணத்தை எடுக்கின்றனர் எனவே  சேஷசமுத்திரம் ஊராட்சி தலைவர், செயலாளர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்து வரும் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

