/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பரிசோதகருடன் நடத்துனர் வாக்குவாதம் வீடியோ வைரல்
/
பரிசோதகருடன் நடத்துனர் வாக்குவாதம் வீடியோ வைரல்
ADDED : ஏப் 11, 2025 06:19 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே டிக்கெட் பரிசோதகரை, நடத்துனர் தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
உளுந்துார்பேட்டை அடுத்த பெரியகுப்பத்தை சேர்ந்தவர் சுபாசந்திரபோஷ்,45; கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை நடத்துனர்.
கடந்த மார்ச்., 30ம் தேதி கள்ளக்குறிச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்ஸில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கும் விழுப்புரம் மண்டல டிக்கெட் பரிசோதகர் சண்முகத்திற்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து சண்முகம் விழுப்புரம் மண்டல அலுவலகத்தில் புகார் செய்தார். துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, பொதுமேலாளர் சதிஷ்குமார், சுபாசந்திரபோைஷ சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் வாக்குவாதம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

