/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராம ஊராட்சி ஊழியர்கள் மறியல் : 360 பேர் கைது
/
கிராம ஊராட்சி ஊழியர்கள் மறியல் : 360 பேர் கைது
ADDED : டிச 09, 2025 06:04 AM

கள்ளக்குறிச்சி: கிராம ஊராட்சி ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 360 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வீராசாமி, தலைவர் சரவணன் தலைமை தாங்கினர். முருகேசன், ராமக்கண்ணு, கஸ்துாரி, முத்துலிங்கம், சிவசங்கர், நல்லத்தங்காள் முன்னிலை வகித்தனர்.
செந்தில், சீனுவாசன், ராஜேந்திரன், விஜயகுமார், சாமிநாதன், ஏழுமலை, கொளஞ்சியம்மாள், மோகன், இளங்கோவன், சேட்டு உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில், கிராம ஊராட்சி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து ஊதியம் வழங்க வேண்டும். மாதம் தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து ஊழிர்களுக்கும் தேவையான உபகரண பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 360 பேரை போலீசார் கைது செய்தனர்.

