/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்
/
கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 08, 2025 11:47 PM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த நன்னாவரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி வெள்ளி கிழமையில் சாகை வார்த்தல் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று சாகை வார்த்தல் திருவிழா ஏற்பாடு நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தங்கள் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என கூறி பிரச்சனையில் ஈடுபட்டு திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் திருவிழா தடையின்றி சுமூகமாக நடத்த கோரி, நேற்று காலை 7.45 மணிக்கு திருவெண்ணெய்நல்லுார் - உளுந்துார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் .
அப்போது, தாசில்தார் தலைமையிலான சமரச கூட்டத்தில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து 8:45 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.