/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர் சேர்க்கை
/
விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 25, 2025 10:34 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை சுற்றுப்பயணம் நடந்தது.
அர்ச்சக் புரோகித் எனும் பூஜாரிகள் பேரமைப்பு மாநில இணைச் செயலாளர் அம்மணியம்மன் ரமேஷ் வழிகாட்டுதல்படி, கோரக் ஷா மாவட்ட அமைப்பாளர் திருமாலழகன் தலைமையில், மாவட்ட இணை அமைப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் உறுப்பினர் சேர்க்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
மாவட்ட செயலாளர் பிரேம்குமார், இணைச் செயலாளர் வேலு, கோட்ட அமைப்பு செயலாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் சங்கராபுரம், சின்னசேலம், திருநாவலுார் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் சென்றனர்.
மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து, புதிய பொறுப்பாளர் பூர்ண கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு வடதொரசலுார் பல்லகச்சேரி சாலை தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலில் இன்று 26ம் தேதி பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்தனர்.