/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு
/
பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு
பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு
பா.ஜ., மாநிலத் தலைவர் வருகை; திரளாக பங்கேற்க அழைப்பு
ADDED : ஜன 25, 2024 11:51 PM

உளுந்துார்பேட்டை : பா.ஜ., மாநிலத் தலைவருக்ககு சிறப்பான வரவேற்பு அளிக்க அனைத்துநிலை நிர்வாகிகளுக்கும் திரளாக பங்கேற்க மாவட்டத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., தலைவர் அருள் விடுத்துள்ள அறிக்கை:
உளுந்துார்பேட்டைக்கு நாளை(27ம் தேதி) காலை 10:00 மணியளவில் 'என் மண் என் மக்கள்' நடைபயண நிகழ்ச்சிக்கு பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகின்றார்.
இதையொட்டி உளுந்துார்பேட்டை ஆதிலட்சுமி திருமண மண்டபத்தின் முன்பிருந்து அண்ணாமலை தலைமையில் பஸ் நிலையம் வரை நடந்து சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
அவருக்கு பா.ஜ., மாவட்ட மகளிர் அணி ஆன்மீக பிரிவு மற்றும் நிர்வாகிகள் தனித்தனியாக வரவேற்பு அளிக்கின்றனர். மேலும் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் காந்திய மக்கள் இயக்கம் சார்பிலும் வரவேற்பு அளிக்கின்றனர்.
எனவே பா.ஜ., அனைத்து நிலை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், பிரிவு மற்றும் அணி நிர்வாகிகள் , தொண்டர்கள் திரளாக பங்கேற்வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.

