/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி : கலெக்டர் ஆய்வு
/
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி : கலெக்டர் ஆய்வு
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி : கலெக்டர் ஆய்வு
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி : கலெக்டர் ஆய்வு
ADDED : நவ 19, 2025 07:06 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நான்கு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பிரசாந்த் தொகுதி வாரியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெற்று பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பணிகள் முறையாக நடக்கின்றதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஈரியூர் கிராமத்தில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

