/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் துவக்கம்
ADDED : டிச 12, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கினார்.
எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக் லிட்., நிறுவன பொறியாளர்கள் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள 3,206 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1873 கண்ட்ரோல் யூனிட்கள், 2056 விவிபேட் உள்ளிட்ட அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்படுகிறது.
ஆய்வின்போது டி.ஆர்.ஓ., ஜீவா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.