/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்
/
அரசு ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்
ADDED : டிச 12, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, பல்வேறு சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அரசு ப ழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக்கோரி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், பத்திரப்பதிவுத்துறை அலுவலர், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் நேற்று ஒருநாள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
நேற்று பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு சென்ற பொதுமக்கள் பலரும் ஏமாற்றத் துடன் திரும் பினர்.

