/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி : அமைச்சர் ஆய்வு
/
கலெக்டர் அலுவலக கட்டுமான பணி : அமைச்சர் ஆய்வு
ADDED : டிச 12, 2025 06:59 AM

கள்ளக்குறிச்சி: வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலக கட்டட நிறைவு பணிகள் மற்றும் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் டிச., 27ம் தேதி திறப்பு விழா நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இந்நிலையில், கலெக்டர் அலுவலக கட்டடத்தை அமைச்சர் வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டடத்தின் நிறைவு பணிகள் குறித்தும், திறப்பு விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

