/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகன பழுதுபார்ப்போர் சங்கம் கொடி நாள் நிதி வழங்கல்
/
வாகன பழுதுபார்ப்போர் சங்கம் கொடி நாள் நிதி வழங்கல்
வாகன பழுதுபார்ப்போர் சங்கம் கொடி நாள் நிதி வழங்கல்
வாகன பழுதுபார்ப்போர் சங்கம் கொடி நாள் நிதி வழங்கல்
ADDED : டிச 12, 2025 06:59 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல சங்கம் சார்பில் கொடி நாள் நிதி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல சங்க சங்கராபுரம் வட்ட கிளை சார்பில் ராணுவ வீரர்கள் சேம நல கொடி நாள் நிதி ரூ.5,450 தொகை சங்கராபுரம் தாசில்தார் வைரக்கண்ணனிடம் வழங்கினர்.
சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம், வட்டத் தலைவர் திருவேங்கடம் தலைமையில் நேற்று நடந்தது. நிர்வாகிகள் அரசு, அறிவழகன், சிவா முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கரூர் சேகர், கவுரவ தலைவர் ஹரிஹரன், மாவட்ட தலைவர் விழுப்புரம் கார்த்தி, கடலுார் நடராஜன், ஈரோடு ராஜி, வத்தலக்குண்டு நடராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
கிளை செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், முன்னாள் தலைவர் மூர்த்தி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், திருக்குறள் பேரவை செயலாளர் லஷ்மிபதி வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

