/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டங்கள்
/
கள்ளக்குறிச்சி நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டங்கள்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டங்கள்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டங்கள்
ADDED : அக் 28, 2025 05:51 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் 13 வார்டுகளில் நேற்று வார்டு சிறப்பு கூட்டங்கள் நடந்தது.
அரசு உத்தரவின்படி நகராட்சி பகுதிகளில் வார்டு உறுப்பினர்கள் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சி 14வது வார்டு விளாந்தாங்கல் சாலை அரசு மாணவர் விடுதியில் நேற்று வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகரமன்ற உறுப்பினர் விஜயகுமாரி கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நகராட்சி பணி ஆய்வர் முகில் அழகன், இளநிலை உதவியாளர் பூர்ணிமா முன்னிலை வகித்தனர்.
நகராட்சி கமிஷனர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வார்டு மக்களிடம் குறைபாடுகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
தினசரி குடிநீர் வழங்க வேண்டும். சாலையோரங்களில் கொட்டப்படும் சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும், தெரு நாய்களின் தொல்லை சரிசெய்ய வேண்டும், மழைக்காலங்களில் வீடுகளில் கழிவுநீர் புகுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதேபோல் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 13 வார்டுகளில் சிறப்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் சிறப்பு கூட்டம் நடத்தி பெறப்படும் கோரிக்கை மனுக்கள் அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

