/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா
/
பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா
ADDED : அக் 28, 2025 05:51 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்பிரமணியர் கோவில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார வைபவம் நடந்தது.
திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவிலில் கடந்த 22ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று சூரசம்கார வைபவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு வள்ளிதேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மாலை 5:20 மணிக்கு உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கீழையூரை வலம் வந்து, வேல் வாங்கி, கோவில் வளாகத்தில் சூரபத்மனை சம்காரம் செய்யும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

