/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் வெல்வோம் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
/
ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் வெல்வோம் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் வெல்வோம் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் வெல்வோம் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பேச்சு
ADDED : ஆக 15, 2025 12:00 AM

ரிஷிவந்தியம்: 'விஜயகாந்தின் ஆசியுடன், ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் தே.மு.தி.க. வெல்லும்' என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பகண்டை கூட்ரோட்டில் தே.மு.தி.க., சார்பில் நடந்த 'உள்ளம் தேடி; இல்லம் நாடி' நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியதாவது:
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துக்கு 2வது முறையாக வெற்றியை தந்து, எதிர்கட்சி தலைவராக்கியது ரிஷிவந்தியம் தொகுதி. ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து ஆட்டம் கண்டுள்ளன.
தொண்டர்களுக்காக எனது வாழ்நாளை அர்ப்பணிக்கிறேன். பின் தங்கிய சட்டசபை தொகுதியாக இருந்த ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றதும் பகண்டை கூட்ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டினார்.
மேலும், மணலுார்பேட்டை உயர்மட்ட பாலம், ஆர்க்கவாடி - அரும்பராம்பட்டு, சுத்தமலை - பொரசப்பட்டு, ராவுத்தநல்லுார் - பிரம்மகுண்டம் உள்ளிட்ட கிராமங்களில் பாலங்கள், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, அனைத்து கிராமங்களுக்கும் சாலை, நிழற்குடை கள் கட்டி தந்தார். சொந்த பணத்தில் குடிநீர் வழங்கி, தமிழ்நாட்டின் முதன்மை தொகுதியாக ரிஷிவந்தியத்தை மாற்றினார்.
வரும் 2026 ஜனவரி 9ம் தேதி கடலுாரில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைவரும் கட்டாயம் வர வேண்டும். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, விஜயகாந்தின் கனவு லட்சியத்தை வெல்ல வேண்டும்.
அதற்கு மாநாடு தான் பிள்ளையார்சுழி. விஜயகாந்தின் ஆசியுடன் ரிஷிவந்தியம் தொகுதியில் மீண்டும் தே.மு.தி.க. வெல்லும். ஈகோ, பொறாமையை ஒதுக்கி விட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.