ADDED : ஏப் 14, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம், ; சின்னசேலம் நித்திய கல்யாண வரதராஜ பெருமாள் சுவாமி கோவிலில் ராமர்-சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சின்னசேலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத நித்திய கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ராம நவமி 8ம் நாள் விழாவையொட்டி, நேற்று ராமர்-சீதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பட்டாச்சாரியார் ஜெயகுமார் தலைமையிலான குழுவினர் உற்சவத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.