/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
/
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
மருத்துவக் கல்லுாரியில் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி
ADDED : அக் 13, 2025 10:51 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் ஒவ்வொரு கல்வி ஆண்டும் 150 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி மருத்துவ கல்லுாரியில் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு வெள்ளை அங்கியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் பவானி, துணை முதல்வர் ஷமீம், மருத்துவ கண்காணிப்பாளர் பழமலை, மருத்துவர் பொற்செல்வி, உதவி நிலைய மருத்துவர் முத்துகுமார் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.