/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மோதப்போவது யார்? காத்திருக்கும் தி.மு.க.,
/
மோதப்போவது யார்? காத்திருக்கும் தி.மு.க.,
ADDED : மார் 19, 2024 06:15 AM
திருக்கோவிலுார்: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் எந்த கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், தி.மு.க., உறுதியாகி இருப்பதால் சுவர் விளம்பரம் இடம் பிடிப்பதில் முன்னிலை வகிக்கிறது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., நேரடியாக போட்டியிடுவது உறுதியாகி விட்டது. யார் வேட்பாளர் என காத்திருக்கின்றனர்.
அதே வேளையில் அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி தனக்கா அல்லது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் தே.மு.தி.க., விற்கா? என்ற குழப்பத்துடன் அ.தி.மு.க.,வினர் அமைதி காத்து வருகின்றனர்.
தி.மு.க.,வில் யார் வேட்பாளராக இருந்தாலும் உதயசூரியன் சின்னம் என்பதால் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் பகுதிகளில் சுவர் பிடித்து, வெள்ளை அடிக்கும் பணியை துவக்கி உள்ளனர்.
அ.தி.மு.க.,வினர் இடத்தை பிடித்தாலும், தொகுதி கட்சிக்கா அல்லது கூட்டணிக்கா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

