/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கணவரிடம் தகராறு மனைவி தற்கொலை
/
கணவரிடம் தகராறு மனைவி தற்கொலை
ADDED : மார் 10, 2024 06:32 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்கீரனுாரைச் சேர்ந்தவர் செண்பகராமன். மர சிற்பம் செய்பவர். கள்ளக்குறிச்சியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா, 22; இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கவுசல்யா கணவர் செண்பகராமனுக்கு போன் செய்துள்ளார். அவர், போனை கட் செய்துள்ளார்.
பணி முடிந்து வீட்டிற்கு வந்த செண்பகராமனிடம் இதுகுறித்து கவுசல்யா கேட்டுள் ளார். இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செண்பகராமன் வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் செண்பகராமன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கவுசல்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

