ADDED : ஏப் 28, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் கோபி, 32; கொத்தனார். இவரது மனைவி பூஜா, 23; திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 23ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி வருவதாக கூறிச் சென்ற பூஜா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.