/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி
/
மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி
ADDED : செப் 02, 2025 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; மனவளக்கலை மன்ற திருக்கோவிலுார் கிளையின் சார்பில், புது தெருவில் உள்ள மன்ற வளாகத்தில் மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் பேராசிரியர் முருகன், நளினாதேவி தம்பதியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மனைவி நல வேட்பு நாள் குறித்து வேதாந்த மகரிஷி அவர்களின் வழிகாட்டுதல் குறித்து எடுத்துக் கூறினர்.
நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டு கணவன் மனைவிக்கிடையே மாலை மாற்றி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.