/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
/
மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை
ADDED : செப் 03, 2025 07:23 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால், கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்துார்பேட்டை நகராட்சி ஜூப்ளி தெருவைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் தேவா, 23; கூலி தொழிலாளி. இவரது மனைவி கீர்த்தினா, 20;இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளனர். மதுபழக்கம் உடைய தேவா, நேற்று முன்தினம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பணத்தை எடுத்து மது குடித்துவிட்டு இரவு 11.30 மணிக்கு வீடு வந்தார்.
இதனை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தேவா வீட்டில் சேலையால் துாக்கில் தொங்கினார். அருகில் இருந்தவர்கள் தேவாவை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.