ADDED : நவ 25, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா நடந்தது.
விழாவிற்கு, செயலாளர் கிரு ஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சுமதி, கண்ணகி முன்னிலை வகித்தனர். நிர்வாகி வசந்த்லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜெயபிரகாஷ் பங்கேற்று மனவளக்கலை மன்றம் குறித்தும், பெண்களின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம், தியாகங்கள், குடும்ப நலன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
புது திருமண ஜோடிகளுக்கு பரிசு வழங்கினர். மேலும், தம்பதியினருக்கு யோகா கலைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் சின்னசேலம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த தம்பதியினர் பங்கேற்றனர். நிர்வாகி வித்யா நன்றி கூறினார்.

