/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலையோர வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
/
சாலையோர வாய்க்காலில் தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
ADDED : மார் 23, 2025 09:55 PM

கள்ளக்குறிச்சி : ள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு சுவர் இல்லாத ஏரி வாய்க்கால் பகுதியில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் உள்ள சேலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலை ஏரி வாய்க்கால் அருகே தடுப்பு சுவர் அமைக்கவில்லை. இதனால், பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தச்சூர் மற்றும் இந்திலி செல்வதற்கான சந்திப்பு பகுதியாக உள்ளதால், இரவு நேரங்களில் வாகனங்களில் விபத்தில் சிக்குகின்றன.
எனவே, ஏரி வாய்க்கால் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.