/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் காவலர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
/
சின்னசேலம் காவலர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
சின்னசேலம் காவலர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
சின்னசேலம் காவலர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?
ADDED : நவ 03, 2024 11:18 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் காவலர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால், குடியிருப்போர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சின்னசேலம் பஸ் நிலையம் அருகே காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு இன்ஸ்பெக்டர் வீடு மற்றும் தலா 6 காவலர் வீடுகள் கொண்ட 2 பிளாக்குகள், 5 வீடுகளுடன் ஒரு பிளாக் என 17 வீடுகள் உள்ளன.இதில் இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் பணியில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் 15 வீடுகளில் காவலர்கள் தங்கியுள்ளனர். மற்ற 2 வீடுகள் வேறு பணிகளுக்கான குடோன்களாக பயன்படுத்தப்படுகிறது.
கிணறு மற்றும் போர்வெல் மூலம் குடிநீர் தேவைபூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் கோடைக் காலங்களில் இங்குள்ள கிணறு மற்றும் போர்வெல் முற்றிலும் வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே, கூடுதல் போர்வெல் அமைத்து தேவையான அளவிற்கு குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்திட வேண்டும். மேலும், வளாகத்தில் சுற்றுச்சுவர் இன்றி பாதுகாப்பின்றி காணப்படுகிறது.
அத்துடன் இங்கு குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் இப்பகுதியில் தேங்கும் குப்பைகளை குடியிருப்புவாசிகளே வேறு வழியின்றி தாங்களாகவே தீயிட்டு எரித்து வருகின்றனர். அத்துடன் இங்கு 10 பழைய வீடுகள் பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதால் புதர் மண்டி விஷ ஜந்துக்கள் பெருகியுள்ளது.
இதனால் இங்கு வசிப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு வருகிறது.
குடியிருப்புகள் சின்னசேலம் பஸ் நிலையத்தின் மிக அருகிலேயே இருப்பதால், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலரும் இவ்வளாகத்தின் அருகிலேயே சாக்கடையோரங்களை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கு வசிக்கும் பெண்கள் வெளியே சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை நிர்வாகம் பராமரிப்பின்றி உள்ள சின்னசேலம் காவலர் குடியிருப்பின் குறைபாடுகளை போக்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.