/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் வார சந்தையில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
/
தியாகதுருகம் வார சந்தையில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
தியாகதுருகம் வார சந்தையில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
தியாகதுருகம் வார சந்தையில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 12, 2025 12:45 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் வார சந்தை வளாகத்தில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடக்கிறது. இங்கு சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் மாலை நேரத்தில் அதிகம் விற்பனையாகும்.
வெளியூரில் இருந்து வருபவர்கள் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் இரவு 9:00 மணி வரை அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல வார சந்தை வளாகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.
ஆனால் இப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாமல் பெரும்பகுதி இருளாக காட்சியளிக்கிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இரவு நேரத்தில் இங்கு பொருட்களை வாங்க வரும் பெண்கள் ஒருவித அச்சத்துடன் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தியாதுருகம் பேரூராட்சி சார்பில் வார சந்தையில் கடை நடத்துபவர்களிடமிருந்து சுங்க வசூல் செய்யப்படுகிறது. ஆனால் இப்பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்காதது கடைக்காரர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
உடனடியாக வார சந்தை வளாகத்தில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக பொருட்களை வாங்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.