/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் நகரில் கழிவுநீர் கால்வாய்கள் துார்வாரப்படுமா? மழைக்காலம் துவங்கும் முன் நடவடிக்கை தேவை
/
திருக்கோவிலுார் நகரில் கழிவுநீர் கால்வாய்கள் துார்வாரப்படுமா? மழைக்காலம் துவங்கும் முன் நடவடிக்கை தேவை
திருக்கோவிலுார் நகரில் கழிவுநீர் கால்வாய்கள் துார்வாரப்படுமா? மழைக்காலம் துவங்கும் முன் நடவடிக்கை தேவை
திருக்கோவிலுார் நகரில் கழிவுநீர் கால்வாய்கள் துார்வாரப்படுமா? மழைக்காலம் துவங்கும் முன் நடவடிக்கை தேவை
ADDED : செப் 02, 2024 10:43 PM
திருக்கோவிலுார் : மழைக்காலம் துவங்கும் முன் திருக்கோவிலுார் நகரின் முக்கிய கழிவுநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவிலுார் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிலையில், உபரி நீர் சித்தேரியன் வாய்க்கால், ஆவியூரான் வாய்க்கால்கள் வழியாகச் சென்று சித்தேரி மற்றும் ஆவியூர் ஏரிகள் நிரம்பி அதன் மூலம் பல நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
ஆனால், நகரமயமாக்கல் காரணமாக திருக்கோவிலுார் ஏரி பாசன நிலங்கள் பெரும்பாலும் குடியிருப்புகளாக மாற்றப்பட்டு விட்டது. இதன் காரணமாக சித்தேரியான் வாய்க்கால், ஆவியூரான் வாய்க்கால்களில் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லாமல் துார்ந்து போனது.
எனவே, பொதுப்பணித் துறையும் இந்த 2 கால்வாய்களை கைவிட்டு விட்டது. இதன் காரணமாக தற்போது, நகராட்சியின் பராமரிப்பிலிருந்து வருகிறது. நகரின் கழிவு நீர் மற்றும் மழைநீர் முழுதும் இந்த கால்வாய்களில் திருப்பி விடப்படுகிறது.
இருப்பினும், நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்பது அனைத்து தரப்பு மக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக நகர் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக என்.ஜி.ஜி.ஓ., நகர், கெங்கையம்மன் கோவில் பிரதான சாலை, ஐந்து முனை சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் தேங்கி விடுகிறது. இது வடிய பல மணி நேரம் ஆகிறது.
இதேபோல் சந்தைப்பேட்டை, நல்லதண்ணி குளம் அருகில் இருக்கும் தாழ்வான பகுதிகளிலும் தேங்குகிறது.
மேலும், திருக்கோவிலுார் மேற்கு வீதியில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில், கால்வாய் சேதமாகி துார்ந்ததால் சாதாரண நாட்களில் கூட கழிவுநீர் செல்லாமல் குளம் போல் தேங்கி சாலைகளில் வழிந்தோடகிறது. இதன் காரணமாக தொற்று நோய் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் மழைக்காலம் துவங்கும்முன் சித்தேரியன் வாய்க்கால், ஆவியூரான் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் துார்வாருவதுடன், நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்களை துாய்மைப்படுத்த வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.