/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழுதடைந்த துறிஞ்சலாறு இரும்பு பாலம் அகற்றப்படுமா?
/
பழுதடைந்த துறிஞ்சலாறு இரும்பு பாலம் அகற்றப்படுமா?
ADDED : அக் 27, 2025 12:08 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், துறிஞ்சலாற்றில் வெள்ளத்தை தடுக்கும் வகையில் இருக்கும் பழுதடைந்த பழைய இரும்பு பாலத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், மணபூண்டிக்கும், தேவனுருக்கும் இடையே துறிஞ்சலாறு தென் பெண்ணையில் சங்க மிக்கிறது.
இந்த இடத்தில் திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் தாழ்வான இரும்பு பாலம் இருந்தது.
பழுதடைந்த இப்பாலத்துக்கு மாற்றாக புதியதாக உயர்மட்ட பாலம் கடந்த 10 ஆண்டிற்கு முன்பு கட்டி திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெஞ்சல் புயல் வெள்ளத்தில் துரிஞ்சல் ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் மணம்பூண்டி, தேவனுார், அரகண்டநல்லுாரில் ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு, துரிஞ்சலாற்று தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் இடத்தில் உள்ள பழுதடைந்த இரும்பு பாலம் துறிஞ்சலாற்று தண்ணீரை தடுத்து நிறுத்தியதும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை தீவிரத்தை கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறை பழுதடைந்த இரும்பு பாலத்தை அகற்றி துறிஞ்சலாற்று தண்ணீர் தடையின்றி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் வகையில் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

