/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்
/
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்
UPDATED : அக் 04, 2025 07:53 AM
ADDED : அக் 03, 2025 11:19 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய வீட்டு வசதி வாரிய குடியுருப்புகளை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவிலுார் மன்னர் ஆட்சி காலத்தில் மட்டுமின்றி, ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். இந்நகரில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதிற்காக புறநகர் பகுதியாக இருக்கும் சந்தப்பேட்டையில் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்டத்திலேயே தலைசிறந்த டேனிஷ் மெஷின் மருத்துவமனை, கடலுாருக்கு அடுத்த நிலையில் தலைமையிடமாக கட்டமைக்கப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம், நீதிமன்ற வளாகங்கள், டி.எஸ்.பி., முகாம் அலுவலகம் என வரிசையாக அலுவலகங்கள் அணிவகுத்து கட்டப்பட்டது. அதேபோல் அதிகாரிகள் தங்குவதற்காக சிறிது துாரத்தில் பயணியர் விடுதி, அதன் எதிரிலேயே பொதுப்பணித்துறை, ஆர்.டி.ஓ., தாசில்தார் பங்களாக்கள் உருவாக்கப்பட்டது.
இதன் அருகிலேயே போலீஸ் குடியிருப்பு, அரசு ஊழியர்கள் தங்குவதற்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, 60 குடியிருப்புகளுடன் கூடிய வீட்டு வசதிய வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. இதில், அரசு ஊழியர்கள் வாடகைக்கு குடியிருந்தனர். முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பழுதடைந்த நிலையில் இருந்த குடியிருப்புகளை பெரும்பாலானவர்கள் காலி செய்து சென்றுவிட்டனர்.
இடிந்து விழும் தருவாயில் உள்ள குடியிருப்பில் இப்பொழுது நான்கு குடும்பங்கள் மட்டுமே வசிக்கிறது. எஞ்சிய குடியிருப்புகள் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் தங்குமிடமாக மாறி இருப்பது, சுற்று வட்டார குடியிருப்பு வாசிகளை கவலையடைய செய்துள்ளது. இதற்கு அருகாமையில் தான் ஆர்.டி.ஓ., தாசில்தார், காவலர் குடியிருப்புகள் உள்ளது.
உயர்மட்ட அதிகாரிகளின் குடியிருப்புகள் ஒரு பக்கம், மறுபக்கம் விரிவடைந்த நகரின் குடியிருப்பு பகுதிகளும் உள்ளது. இதற்கு மத்தியில் பாழடைந்து கிடக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், குடித்துவிட்டு கும்மாளம் போடும் சமூக விரோதிகளால் குடியிருப்பு வாசிகள் அவதி அடைகின்றனர்.