ADDED : அக் 03, 2025 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் நவராத்திரி விழா நவசண்டி ஹோமம் நடந்தது.
திருக்கோவிலூர், தபோவனத்தில் அமைந்துள்ள ஞானானந்தகிரி சுவாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் சரத் நவராத்திரி விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1ம் தேதி, நவசண்டி ஹோமம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி அதிஷ்டத்தில் மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை சுஹாசினி பூஜை, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்ச்சார்சனை பூர்த்தி, அதிர்ஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுர மர்த்தினி புறப்பாடு நடந்தது.