/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வணிக திருவிழா கண்காட்சி விவசாயிகள் பங்கேற்பு
/
வணிக திருவிழா கண்காட்சி விவசாயிகள் பங்கேற்பு
ADDED : அக் 03, 2025 11:21 PM
சங்கராபுரம் : சென்னை நந்தம்பாக்கம் வேளாண் வணிக திருவிழாவில் சங்கராபுரம் விவசாயிகள் பங்கேற்றனர்.
சென்னை நந்தம்பாக்கம் வேளாண் வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. இதில், சங்கராபுரம் வட்டார வேளாண்மை அலுவலகம் சார்பில் பங்கேற்க சென்ற விவசாயிகளை உதவி இயக்குனர் ஆனந்தன், உதவி வேளாண் அலுவலர் பழனிவேல் அனுப்பி வைத்தனர்.
வணிகத் திருவிழாவில் வேளாண் திட்டங்கள், சாதனைகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள், மின்னணு சந்தைப்படுத்துதல், வேளாண் வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், உணவு பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், காய்கறி சாகுபடி, மாடி தோட்டம் ஆகிய தொடர்பான கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு பயன்பெற்றனர். சங்கராபுரம் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோக பிரியா ஆகியோர் விவசாயிகள் சென்று வருவதிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.