sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? போதிய இட வசதி இல்லாமல் விவசாயிகள் தவிப்பு

/

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? போதிய இட வசதி இல்லாமல் விவசாயிகள் தவிப்பு

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? போதிய இட வசதி இல்லாமல் விவசாயிகள் தவிப்பு

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? போதிய இட வசதி இல்லாமல் விவசாயிகள் தவிப்பு


ADDED : மே 02, 2024 11:58 PM

Google News

ADDED : மே 02, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலக பயன்பாட்டிற்காக முழுமையாக விட்டுக்கொடுத்த மார்க்கெட் கமிட்டி போதிய இடவசதியின்றி செயல்பட முடியாமல் தவித்து வருகிறது. எனவே கமிட்டியை வேறிடத்திற்கு மாற்றி, முறையாக இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஆனால் இதற்கான நிரந்தர கலெக்டர் அலுவலகம் அமைக்கப்படாததால் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி கட்டடம் கலெக்டர் அலுவலகமாக கடந்த 2019ம் ஆண்டு ஆக.31ம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்டது. அப்போது முதல் வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கலெக்டர் அலுவலகம் மற்றும் ஏனைய மாவட்ட அலுவலகங்கள் அதில் இயங்கி வருகின்றன. இதனுடன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெரும்பாலான கட்டடத்தை பல்வேறு முக்கிய அலுவலகங்களாக கலெக்டர் அலுவலகமே பயன்படுத்தி வருகிறது.

அத்துடன் கடந்த 2022-ம் வருடம் அக்.24-ம் தேதி மேலும் கமிட்டியின் பலகட்டடங்களும் கலெக்டர் அலுவலகமாக மாற்றப்பட்டது. படிப்படியாக கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி கமிட்டியின் அலுவலகங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு செல்வது தொடர்ந்து வருகிறது.

இதனால் போதிய இட வசதி, கமிட்டிக்கான வழி போன்ற அத்தியாசிய வசதிகள் இல்லாததால், கமிட்டிக்கு விளைபொருட்களை கொண்டு செல்வதும், விற்ற பொருட்களை எடுத்து செல்லவும் முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

விவசாயமே பிரதான தொழிலாக கொண்ட மாவட்டமாக கள்ளக்குறிச்சி உள்ளது. முப்போகும் விளையும் விவசாய நிலங்கள் நிறைந்த இப்பகுதியில் இயங்கும் மார்க்கெட் கமிட்டியின் கடந்த 2023-ம் ஆண்டின் மொத்த வர்த்தகம் ரூ.65.12 கோடி ஆகும். தமிழகத்திலேயே விவசாய விளைபொருட்களின் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கமிட்டிகளில் முதன்மை பெற்ற கமிட்டியாக கள்ளக்குறிச்சி விளங்கி வருகிறது.

கமிட்டிக்கு விளைபொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள் இதனை சுட்டிக்காட்டி கடந்த 2023 ம் ஆண்டு நவம்பர் மாதம் 2 நாட்கள் கொள்முதல் நிறுத்தம் போராட்டம் நடத்தினர். மேலும் கடந்த 2024 ஜன.9 அன்று ஒரு நாள் கமிட்டி கண்காணிப்பாளரிடம் முறையிட்டு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தேர்தல் உள்ளிட்ட அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள் காரணமாக இவர்களின் கோரிக்கை குறித்து யாரும் கவனிக்காமல் கமிட்டியின் அவலம் 5 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கமிட்டிக்கான வாடகை தொகையும், இதுவரை கலெக்டர் அலுவலகத்தால் வழங்கப்படவில்லை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

எனவே கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியை அதற்கான முழு அந்தஸ்துடன் புறநகர் பகுதியில் வேறிடத்திற்கு மாற்றி முழுமையாக இயங்கிட வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us