/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான பணி.. துவங்குமா? கல்வராயன்மலை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
/
பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான பணி.. துவங்குமா? கல்வராயன்மலை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான பணி.. துவங்குமா? கல்வராயன்மலை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதான பணி.. துவங்குமா? கல்வராயன்மலை பகுதி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 14, 2025 06:36 AM

.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கல்வராயன் மலை உள்ளது. 600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, இந்த மலை வடக்கில் திருவண்ணாமலை, தெற்கில் சேலம், வடமேற்கில் தர்மபுரி ஆகிய 3 மாவட்டங்களின் எல்லைகளாக அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயம், கால்நடை பராமரிப்பு, கடுக்காய், தேன் சேகரித்தல் உள்ளிட்ட தொழில்களையே முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இதனால் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி உள்ளனர்.
இந்நிலையில் வாழ்வாதாரத்திற்காக கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிங்களுக்கு மிளகு பறித்தல், மரம் வெட்டுதல் மற்றும் செங்கல் சூளை பணிகளுக்கும், சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் கட்டடபணிகளுக்கும், கூலி தொழிலாளிகளாக செல்கின்றனர்.
சில சமூக விரோதிகள் இப்பகுதி மக்களின் அறியாமையை பயன்படுத்தி சாராயம் காய்ச்சுதல், ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்துதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.
இதனால் இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பட்டம் பெற்ற இளைஞர்கள் பலர், வழக்குகளில் சிக்கி, சிறை தண்டனை பெற்று எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அவல நிலை தொடர் கதையாக உள்ளது.
பணிகள் துவக்கம்
இந்நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் நல மேம்பாட்டிற்காக வெள்ளிமலையில் மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ரூ.1.25 கோடி மதிப்பில் தேசிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க, 7 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. இதில் பயிற்சி அளிக்க மைதானம், வீரர்-வீராங்கனையருக்கு தனித்தனி விடுதிகள், அலுவலக கட்டடம் மற்றும் கேலரிகள் அமைக்கப்பட இருந்தது.
மைதானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. தொடர்ந்து, ரூ.80 லட்சம் மதிப்பில் நிலங்கள் சமன் செய்யப்பட்டது. இந்நிலையில், மைதானம் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
மக்கள் எதிர்பார்ப்பு
அதுமட்டுமின்றி, ஒதுக்கப்பட்ட தொகையில் மீதி தொகை அரசிற்கு திரும்ப அனுப்பப்பட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால், மைதானத்தில் புதர்கள் மண்டி காணப்பட்டன. தற்போது கோடை விடுமுறை துவங்கி உள்ளதால் அப்பகுதி இளைஞர்கள் புதிதாக அமைக்கப்பட்ட புதர்களை சொந்த செலவில் அகற்றி தற்காலிகமாக, விளையாட தயார் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிமலையில் பாதியில் நிறுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளை மீண்டும் துவங்க கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

