/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
ADDED : டிச 12, 2025 07:22 AM
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே வயிற்றுவலியால் களைக்கொல்லி மருந்து குடித்த பெண் உயிரிழந்தார்.
வாணாபுரம் அடுத்த நுாரோலை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி ஆதிலட்சுமி,33; இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவது வழக்கம்.
கடந்த 5ம் தேதி வயிற்று வலி தாங்க முடியாததால் வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தினை ஆதிலட்சுமி குடித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் ஆதிலட்சுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆதிலட்சுமி உயிரிழந்தார். புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

