ADDED : ஜன 30, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
எம்.குன்னத்துாரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி புவனேஸ்வரி, 20; கடந்த ஓராண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் செங்கல் சூளை தொழிலாளர்கள்.
கடந்த 27ம் தேதி மாலை புவனேஸ்வரியை திருநறுங்குன்றம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு ராமச்சந்திரன் சென்னைக்கு வேலைக்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை புவனேஸ்வரி வீட்டில் புடவையால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.