/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து பலி
/
ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து பலி
ADDED : நவ 22, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆட்டோவில் சென்ற பெண் தவறி விழுந்து இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பூங்காவனம், 56; இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விவசாய கூலி வேலைக்கு ஆட்டோவில் சென்றார்.
கிடங்கடன் பாண்டலம் அருகே சென்றபோது திடீரென ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

