நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை, மேல்பாச்சேரியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் ராஜகண்ணு, 30; இவரது மனைவி கவிதா, 29; இருவரும் கடந்த 18ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வந்தனர்.
அங்கு வங்கி ஒன்றின் அருகே ராஜகண்ணுவை நிற்க வைத்துவிட்டுச் சென்ற கவிதா வெகு நேரமாகியும் திரும்பவில்லை. 30 நிமிடத்திற்குப் பிறகு, 'தன்னை தேட வேண்டாம்' என ராஜகண்ணுவிற்கு மொபைல் போன் மூலம் தெரிவித்து விட்டு சுவிட்ச் ஆப் செய்துள்ளார். ராஜகண்ணு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.